இரண்டாம் நிலை கட்டுரை

நாட்காட்டி ⭐

நாட்காட்டி என்பது, நாளைக் காட்டுவது என்ற பொருளைக் கொடுத்தாலும், இது உண்மையில், சமூக, சோதிட, சமய, வணிக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும்.

காகிதத்தில் அச்சிடப்படும் நாட்காட்டிகள், உலகம் முழுதும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது கைபேசி கணினி போன்ற மின்னணு இயந்திரங்களில் நாட்காட்டிகள் மின் வடிவிலும் இருக்கிறது.

தமிழர்கள் தினம்தோறும் பயன்படுத்தும் நாட்காட்டியானது பல்வேறு தகவல்களை ஒருங்கிணைத்ததாகும்.

இதில் தேதி, கிழமை, மாதம் என ஆங்கில வழி நாட்களை முதன்மையாகக் காட்டினாலும். தமிழர்கள் பயன்படுத்தும் மாத முறையும் நாட்கள் முறையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இஸ்லாமிய நாள்காட்டியும் இருக்கும்.

அது மட்டுமல்லாமல் ஒரு நாளில் நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவைகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒன்பது ராசிகளுக்கான பலனும் இருக்கும்.

விடுமுறைகள், தலைவர்களின் பிறந்தநாள், தினம்தோறும் ஒரு தத்துவம், என்று பல்வேறு தகவல்களை உள்ளடக்கியது தான் தமிழர்களின் நாட்காட்டி.

ஒரு நாளைப் பல்வேறு தகவலோடும், தன்னம்பிக்கையோடும் தொடங்க தமிழ் நாள்காட்டி பெரிதும் பயன்படுகிறது.