இரண்டாம் நிலை கட்டுரை

தமிழ் ⭐

உலகில் பிற இனத்தவர்களிடம் தமிழ் என்றால், அவர்கள் முதலில் அடையாளம் காணுவது, தமிழ் போராளிகளைத் தான். மொழி அறிந்தவர்கள், தமிழ் என்ற சொல்லை மொழியின் பெயராகப் பார்ப்பார்கள். ஆனால் உண்மையில், தமிழர்களுக்குத் தமிழ் அனைத்துமாய் நிற்கின்றது.

தமிழ் மொழியாகப் பிறந்து, தாயின் கருவறையில் பேசத் தொடங்கி, பிள்ளைகளின் தாய் மொழியாகி. தமிழன் தமிழச்சி என்ற தனிமனித அடையாளமாக மாறி. உலகில் 10 கோடி பெரும் மக்களுக்குக் கூட்டத்திற்கு தமிழ் இனம் என்ற அடையாளமாகி. அவர்கள் வாழும் இடத்திற்கு தமிழ் நாடு என்று பெயராகி. தமிழை கடவுளாக்கி வணங்கி. எம்மதத்திலும் சாராத தமிழர்களின் தனித்த மெய்யியலை தமிழம் என்ற தமிழ் மதமாக்கி. தமிழர்களுக்குத் தமிழ் அனைத்துமாக இருக்கின்றது.

இதோ ஒரு உரையாடலைப் பார்ப்போம்

நீ யார்?
நான் தமிழன்

உன் பெயர் என்ன?
என் பெயர் தமிழ்

உன் தாய்மொழி என்ன?
என் தாய்மொழி தமிழ்

உன் நாடு என்ன?
என் நாடு தமிழ்நாடு

உன் இனம் என்ன?
என் இனம் தமிழினம்

உனது தேசியம் (Nationality) என்ன?
எனது தேசியம் தமிழ் தேசியம்

உனது மதம் என்ன?
என் மதம் தமிழ் (தமிழம்)

இப்படி ஒருவனால் கூற முடியும். அப்படி என்றால் தமிழ் அனைத்து அடையாளமாகி, மொழியாகி மூச்சாகி இன்றும் வாழ்ந்து வருகிறது. உலகில் வேறு எந்த மொழிகளுக்கும் இத்தனை உரிமைகள் இருக்க வாய்ப்பு இல்லை.

தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்றால், தமிழ் வாழ வேண்டும், தமிழ் வாழ வேண்டும் என்றால், நாம் அனைவரும் தமிழை கசடற அறிந்திருக்க வேண்டும்.

தமிழை பேச வேண்டும், கேட்க வேண்டும், எழுத வேண்டும், கனவு காண வேண்டும். ஏன் முதலும் முற்றுமாகத் தமிழிலே சிந்திக்க வேண்டும்.