முதல் நிலை கட்டுரை

வானவில்

மழைக்கு முன்னும், பின்னும் வானத்தில் வண்ணங்களாக வில் போன்ற அமைப்பில் தோன்றுவதால் இது வானவில் என்று அழைப்படுகிறது. இயற்கையின் பரிசு வானவில். வானவில்லானது எல்லா வயதினரையும் தன் அழகால் கவர்ந்து இழுக்கும்.

சூரிய ஒளியானது காற்றில் உள்ள மழைத்துளிகளில் பட்டு ஒளிவிலகல், எதிரொளிப்பு மற்றும் ஒளிச்சிதறல் உள்ளாகி ஏழு வண்ணங்களாகப் பிரிவடைகின்றது. இதனையே நாம் வானவில்லாகக் காண்கிறோம்.

வானவில்லில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எனக் கண்ணைக் கவரும் ஏழு வண்ணங்கள் காணப்படுகின்றன.

வானவில்லானது உண்மையில் வட்ட வடிமானது. ஆனால் புவியின் மேற்பரப்பிலிருந்து பார்க்கும் நம் கண்ணிற்கு அது அரைவட்டமாகத் தெரிகிறது.

ஒளியானது மழைதுளியினுள் நுழைந்து வெளியேறும் முன்பு இரண்டு முறை பிரதிபலிப்படையும்போது இரட்டை வானவில்லானது உண்டாகிறது.