முதல் நிலை கட்டுரை

வானவில் குடும்பம்

வானவில்லின் நிறத்தைப் போல, எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர், அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை மற்றும் நான். காலையில் எழுந்து படுக்கையைச் சரி செய்து விட்டு, குளியலறையில் காலைக்கடன் முடித்து, பல் துலக்கி, குளித்துவிடுவோம். கொஞ்சம் நேரம் படிப்போம். காலை உணவு சாப்பிட்டு விட்டு, மதியத்திற்கு உணவு எடுத்துக்கொண்டு, படிக்கப் பள்ளி செல்வோம், அப்பா அம்மா வேலைக்கு அலுவலகம் செல்வார்கள்.

அனைவரும் சாயங்காலம் வீட்டுக்குத் திரும்பு வந்து விடுவோம். முதலில் வீட்டுப் பாடத்தை முடித்து விடுவோம். கொஞ்சம் நேரம் படிப்போம். வெளியே சென்று விளையாடுவோம். பிறகு அனைவரும் சேர்ந்து வீட்டு வேலையைப் பிரித்துச் செய்வோம்.

அம்மா சமையலறையில் சமைப்பார், அப்பா அப்பா சலவையறையில் துணி துவைப்பார், பாத்திரம் விளக்குவார், அக்கா வீடு கூட்டுவாள், அண்ணன் துணிகளை மடிப்பார். தம்பியும் தங்கையும் துணிகளை அவரவர் இடத்தில் அடுக்குவார்கள். நானும் தம்பி தங்கையும் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவோம். தபாலை தபால் பெட்டியிலிருந்து எடுத்து வருவோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் வீடு துடைப்போம்.

உணவு தயாரான பிறகு அனைவரும் அமர்ந்து சாப்பிடுவோம். பிறகு கொஞ்சம் நேரம் எல்லோரும் கூடத்தில் தொலைக்காட்சி பார்த்துச் சிரித்து மகிழ்வோம். மீண்டும் அடுத்த நாளுக்குத் தயாராக அனைவரும் படுக்கையறைக்கு உறங்கச் செல்வோம். அன்றைய நினைவுகளோடு, அடுத்த நாள் கனவோடு, ஒவ்வொரு நாளும் நிறைவு பெறும்.

அறைகள்

செயல்பாடு