இலக்கணம் கட்டுரை

திணை, பால், எண், இடம், காலம்

  1. திணை

உயர்தினை – பொதுவாக மனிதனைச் சுட்டுகின்ற பெயர்கள் உயர்திணை.
(எ.கா) – அரசன், கடவுள், குழந்தை, மனிதர்கள், முனிவர்கள்

அஃறிணை – மனிதர் அல்லாத ஏனைய உயிருள்ள பொருட்கள், உயிரற்ற பொருட்கள் எல்லாவற்றையும் சுட்டுகின்ற பெயர்கள் அஃறிணை.
(எ.கா) – மரம், கல், ஆடு, பசு, மலை, நாய், கதிரை

2. பால்

ஆண்பால் – ஆண்களைக் குறிப்பது ஆண்பால் எனப்படும்.
(எ.கா) வளவன், செழியன்

பெண்பால் – பெண்களைக் குறி்ப்பது பெண்பால் எனப்படும்.
(எ.கா) யாழினி, மாலினி

பலர்பால் – உயர்திணையில் உள்ள ஆண், பெண்களில் பலரைக் குறிப்பது பலர்பால் எனப்படும்.
(எ.கா) மக்கள், ஆண்கள், பெண்கள்

ஒன்றன் பால் – அஃறிணைப் பொருள்களில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பது ஒன்றன் பால் எனப்படும்.
(எ.கா) கல், மரம்

பலவின் பால் – அஃறிணைப் பொருள்களில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் எனப்படும்.
(எ.கா) அவை, வீடுகள், மாடுகள்

3. எண்

எண் – எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கண வகை

ஒருமை – ஒன்றைக் குறிக்கும் சொல்.

(எ.கா) கண்

பன்மை – பலவற்றைக் குறிக்கும் சொல்.

(எ.கா) கண்கள்

4. இடம்

இடம் – பேசுவோன் கேட்போன் பேசப்படும் பொருள் அல்லது பேசப்படுவோன் என்ற அடிப்படையில் சொற்களை இனங்காண்பது இடம் எனப்படும்.

தன்மை – தன்னைக் குறிப்பது.

(எ.கா) நான், நம், நாம், நமது, நாங்கள், என், எம், எமது, எங்கள், தான், தன், தாம், தமது, தாங்கள், யான், யாம்

முன்னிலை – முன்னிருந்து கேட்பவரைக் குறிப்பது

(எ.கா) நீ, நீர், நீம், நும், நின், நுன், நீயிர், நீவிர், நுங்கள், நீர்கள், நீங்கள், நீயிர்கள், நீவிர்கள், உன், உம், உங்கள்

படர்க்கை – சற்றுத் தொலைவிலிருந்து கேட்பவரைக் குறிப்பது

(எ.கா) அவை, இவை, அது, இது, அவன், இவன், அவள், இவள், உவள், அவர், இவர், அவர்கள், இவர்கள், உவர்கள்

படர்க்கை போல் வரும் முன்னிலைச்சுட்டு

(எ.கா) உவன், உவள், உது, உவை, உவடம் (உவ்விடம்), உங்கை (உங்கே), உந்தா

5. காலம்

காலம் – ஒரு செயல் எப்பொழுது நடந்தது என்பதை உணர்த்தும் இலக்கணக்குறி காலம் ஆகும்.

இறந்தகாலம் – நடந்து முடிந்ததை குறிப்பிடுவது இறந்தகாலம் ஆகும்.

(எ.கா) வந்தான், சென்றான், ஆடியது, தாவியது, ஓடினார்கள்

நிகழ்காலம் – நடந்து கொண்டிருப்பதை குறிப்பிடுவது நிகழ்காலம் ஆகும்.

(எ.கா) வருக்கின்றான், செல்கின்றான், ஆடுகின்றது, தாவுகிறது, ஓடுகின்றார்கள்

எதிர்காலம் – நடக்கப் போவதை குறிப்பிடுவது எதிர்காலம் ஆகும்.

(எ.கா) வருவான், செல்வான், ஓடுவார்கள், படிப்பான், பாய்வான்

ஆண்பால் = அவன், இவன், அவர்

பெண்பால் = அவள், இவள்

பலர்பால் = அவர்கள், இவர்கள்

ஒன்றன்பால் = அது

பலவின்பால் = அவை, அவற்றை

தன்மை = நான், நாம், நாங்கள்

முன்னிலை = நீ, நீங்கள்

படர்க்கை = அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை

இறந்தகாலம் = த், ட், ந், இன்

நிகழ்காலம் = கிறு, கின்று

எதிர்காலம் = வ், ப்

உடன்பாடு = +ம்

எதிர்மறை = +ஆது