இலக்கணம் கட்டுரை

வினா சொல்

வினா சொற்கள்

கேள்வி கேட்கப் பயன்படும் சொற்களின் முதல் எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் ஆகும்.

வினா எழுத்துக்கள் = ஆ, எ, ஏ, ஓ, யா

தமிழ் வினா சொற்கள் சிறப்புடையது. உதாரணமாக இங்கு ஆங்கிலம் தமிழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலம் தமிழுக்கு நெருக்கமாக இருக்கிறதே தவிர முழு பொருளையும் உருவாக்கவில்லை. (எ.கா) எத்தனையாவது? யாரை?

ஏன்? Why? ஏன் நீ வீட்டுப்பாடம் எழுதவில்லை
என்ன? What? உன் பெயர் என்ன?
எங்கிருந்து? From Where? நீ எங்கிருந்து வருகிறாய்?
எங்கே?
எங்கு ?
Where? உன் வீடு எங்கே இருக்கிறது?
நீ எங்கு இருக்கிறாய்?
எதற்கு?
எதற்காக?
Why? நீ எதற்காக அழுகிறாய்?
எதனால்? Why? கால்களில் வீக்கம் எதனால் வந்தது?
எதனுடைய? Of Which? எதனுடைய கொம்பு இது?
எது? Which One? உனக்குப் பிடித்த விலங்கு எது?
எத்தனை? How Many? மரத்தில் எத்தனை மாங்காய் இருக்கிறது?
எத்தனையாவது? How Many? எத்தனையாவது இட்லி சாப்பிடுகிறாய்?
எந்த? Which? எந்த விளையாட்டு உனக்கு மிகவும் பிடிக்கும்?
எப்படி? How? எப்படி பள்ளிக்கூடம் செல்வாய்?
எப்படிப்பட்ட? What Kind? எப்படிப்பட்ட நண்பன் உனக்கு வேண்டும்?
எப்பொழுது? When? இரவில் எப்போது உறங்கச் செல்வாய்?
எவ்வளவு? How Much? உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்?
எவ்வாறு? How? குளிருக்கு எவ்வாறு உடை அணிய வேண்டும்?
யாரால்? By Whom? கம்ப ராமாயணம் யாரால் இயற்றப்பட்டது
யாருக்கு? To Whom? இந்தப் பரிசை யாருக்கு தருவாய்?
யாருடன்?
யாரோடு?
With Whom? யாருடன் பள்ளிக்கு வந்தாய்?
யாருடைய?
யாருடையது?
Whose? இது யாருடைய பேனா?
இந்தப் கைபேசி யாருடையது?
யாரை? Who? ஆசிரியர்களுள் யாரை உனக்குப் பிடிக்கும்
யார்?
எவர்?
Who? என் அப்பா ஈசன் உன் அப்பா யார்?
இவர் இல்லை என்றால் வேறு எவர்
யாவை? What Are? கிழமை ஏழு அவை யாவை?
நானா? Am I? நீயா நானா? ஒரு கைப்பார்த்துவிடுவோம்
நீனா?
நீங்களா?
Are You? நீங்களா? நாங்களா? ஒரு கைப்பார்த்துவிடுவோம்
என்னையா? Me? என்னையா கூப்பிட்டீங்க
உங்களையா?
உன்னையா?
You? அவர் கூப்பிட்டது எங்களையா? உங்களையா