இலக்கணம் கட்டுரை

பெயரடை வினையடை

அடைமொழிகள் என்றால் என்ன?

ஒரு பெயர்ச்சொல்லின் அல்லது ஒரு வினைச்சொல்லின் பண்பை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சொற்கள் அடைமொழிகள் எனப்படும்.

பெயர் சொல்லின் பண்பை விளக்க அதனோடு இணைந்து வரும் சொல் பெயரடை எனப்படும்

அழகான சிறுமி
புதுமையான பாடம்
நல்ல பாடல்
கேட்ட பழக்கம்
நல்ல புத்தகம்
விசாலமான மரம்
சிறிய வீடு
சிவந்த கண்கள்
நல்ல புத்தகம்
நீண்ட பயணம்
அழகான கிளி
இனிமையான பாடல்
பண்புள்ள மாணவன்

வினை சொல்லின் பண்பை விளக்க அதனோடு இணைந்து வரும் சொல் வினையடை எனப்படும்

உயரமாகப் பறந்தது
கண்ணன் நிதானமாய்க் பேசினான்.
கண்ணன் மாலையில் வருவான்.
கமலா வேகமாக ஓடினாள்.
சட்டமாகச் சிரித்தார்கள்
சிறுவன் கீழே விழுந்தான்.
சிறுவன் வேகமாக ஓடினான்.
தவறாகச் செய்தான்
நான் நேற்று வந்தேன்.
வேகமாக ஓடினாள்
ஆசிரியர் இனிமையாகப் பாடினார்.
ஆசிரியர் உள்ளே வந்தார்.
இவன் அடிக்கடி வருகிறான்.

குறிப்பு: மேலும் பின்வரும் நிலைகளில் வினையடைகள் வருதலும் உண்டு.

தனித்து அல்லது அடுக்கி வரும் ஒலிக்குறிப்பு சொற்களை அடுத்து \\\’என்று\\\’, \\\’என\\\’ என்னும் இடைச்சொற்கள் விகுதி பெறல்.
உதாரணம் : திடீரென்று, திடீர்திடீரென்று

காலம் உணர்த்தும் வினையடைகள்
உதாரணம் : நேற்று, இன்று, நாளை, மாலை, முன்னர்

இடம் உணர்த்தும் வினையடைகள்
உதாரணம் : அங்கே, இங்கே, உள்ளே, வெளியே

வினை எவ்வாறு நிகழ்ந்தது என்பதை உணர்த்தும் வினையடைகள்
உதாரணம் : வேகமாக, நிதானமாக, இனிமையாக

காலத் தொடர்ச்சி உணர்த்தும் வினையடைகள்
உதாரணம் : அடிக்கடி, தினமும், திடீரென்று

அளவு உணர்த்தும் வினையடைகள்
உதாரணம் : நிறைய, ஏராளமாக, கொஞ்சமாக