இலக்கணம் கட்டுரை

புணர்ச்சி விதிகள்

இரு சொல் புணரும் விதி

முதலில் நிற்கும் மொழி நிலைமொழியாகும். நிலைமொழியுடன் வந்து புணரும் மொழி வருமொழி எனப்படும்.

தமிழ் அறிவு, இதில் தமிழ் நிலைமொழி, அறிவு வருமொழி.

தமிழ் அறிவு = தமி-(ழ்+அ)-றிவு = தமிழறிவு

நிலைமொழி + வருமொழி = புதுமொழி

சேர்தல்
தமிழ் + நாடு = தமிழ்நாடு

கலத்தல்
தமிழ் + ஈழம் = தமிழீழம்

தோன்றல்
தமிழ் + தாய் = தமிழ்த்தாய்

கெடுதல்
வீரம் + வேங்கை = வீரவேங்கை

திரிதல்
பால் + சோறு = பாற்சோறு
கண் + நன்று = கண்ணன்று
பொன் + தீது = பொன்றிது

வகை 1 – கலத்தல்

நிலைமொழி சொல்லும் வருமொழி சொல்லும் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒன்றோடு ஒன்று சேரும்

(எ.கா.) 

பலா + மரம் = பலாமரம்

வகை 2 – கலத்தல்

முன்வரும் சொல் மெய்யெலுழுத்தில் முடிந்து அடுத்தச் சொல் உயிரெழுத்தில் தொடங்கினால்:

கடைசி மெய்யெழுத்து + முதல் உயிரெலுத்து = உயிர்மெய் எழுத்தாகி கலக்கும்.

(எ.கா.) 

• மெய் + எழுத்து = மெய்யெழுத்து (ய் + எ → யெ)
• கோபம் + உள்ள = கோபமுள்ள (ம் + உ → மு)

வகை 3 – தோன்றல்

வரும் மொழி முதலில் க, ச, ட, த, ப, ற என்கிற வல்லின எழுத்து வந்தால். நிலைமொழி இறுதியில் அந்தந்த ஒற்று (க், ச், த், ப்) பிறந்து புணரும். (ட, ற சொல் முதல் வராது)

(எ.கா.) 

பார்த்து + ப் + டி = பார்த்துப்படி

வகை 4 – கெடுதல்

வருமொழி முதல் →
நிலைமொழி இறுதி ↓
பொது க் ச் த் ப்
ம் ங் ஞ் ந் ம் / ப் / ம்
ல் / ன் ற் ற் ற்ற் ற்
ள் / ண் ட் ட் ட்ட் ட்

”ம்” ஐத் தொடர்ந்து

1. க வரிசை வந்தால்: ம் → ங் ஆகும்
2. ச வரிசை வந்தால்: ம் → ஞ் ஆகும்
3. த வரிசை வந்தால்: ம் → ந் ஆகும்

(எ.கா.) 

• சாபம் + கேள் = சாபங்கேள் (ம் → ங்)
• சாபம் + செய் = சாபஞ்செய் (ம் → ஞ்)
• அறிமுகம் + தேவை = அறிமுகந்தேவை (ம் → ந்)

வகை 5 – திரிதல்

ல் → ற் ஆகத் திரிதல்

”ல்” ஐத் தொடர்ந்து
 
1. க வரிசை வந்தால்: ல் → ற் ஆகும்
2. ச வரிசை வந்தால்: ல் → ற் ஆகும்
3. ப வரிசை வந்தால்: ல் → ற் ஆகும்
4. த வரிசை வந்தால்: ல்த் → ற்ற் ஆகும்

(எ.கா.) 

• முதல் + காட்சி = முதற்காட்சி
• பதில் + சொல் = பதிற்சொல்
• முதல் + பக்கம் = முதற்பக்கம்
• கடல் + திரை = கடற்றிரை (ல் + தி → ல் + த் + இ → ற்ற் + இ → ற்றி)

ள் → ட் ஆகத் திரிதல்

”ள்” ஐத் தொடர்ந்து
 
1. க வரிசை வந்தால்: ள் → ட் ஆகும்
2. ச வரிசை வந்தால்: ள் → ட் ஆகும்
3. ப வரிசை வந்தால்: ள் → ட் ஆகும்
4. த வரிசை வந்தால்: ள்த் → ட் அல்லது ள்த் → ட்ட் ஆகும்

(எ.கா.) 

• திருநாள் + கடன் = திருநாட்கடன் (ள் → ட்)
• மக்கள் + சார்பு = மக்கட்சார்பு (ள் → ட்)
• உள் + புறம் = உட்புறம் (ள் → ட்)
• நாள் + தோறும் = நாடோறும் (ள்தோ → ள் + த் + ஓ → ட் + ஓ → டோ)

ண் → ட் ஆகத் திரிதல்

”ண்” ஐத் தொடர்ந்து
 
1. க வரிசை வந்தால்: ண் → ட் ஆகும்
2. ச வரிசை வந்தால்: ண் → ட் ஆகும்
3. ப வரிசை வந்தால்: ண் → ட் ஆகும்
4. த வரிசை வந்தால்: த் → ட் அல்லது ண்த் → ட்ட் ஆகும்

(எ.கா.) 

• மண் + காப்பு = மட்காப்பு (ண் → ட்)
• இளமைக்கண் + செல்வம் = இளமைக்கட்செல்வம் (ண் → ட்)
• மண் + பாத்திரம் = மட்பாத்திரம் (ண் → ட்)
• மண் + தலம் = மண்டலம் (ண்த → ண்த் + அ → ண்ட் + அ → ண்ட)

ன் → ற் ஆகத் திரிதல்

”ன்” ஐத் தொடர்ந்து
 
1. க வரிசை வந்தால்: ன் → ற் ஆகும்
2. ச வரிசை வந்தால்: ன் → ற் ஆகும்
3. ப வரிசை வந்தால்: ன் → ற் ஆகும்
4. த வரிசை வந்தால்: த் → ற் அல்லது ன்த் → ற்ற் ஆகும்

(எ.கா.) 

• பொன் + கொல்லன் = பொற்கொல்லன் (ன்கொ → ற்கொ)
• பொன் + சட்டி = பொற்சட்டி (ன்ச → ற்ச)
• பொன் + பாதம் = பொற்பாதம் (ன்பா → ற்பா)
• பலன் + தந்தான் = பலன்றந்தான் (ன்த → ன் + த் + அ → ன்ற் + அ → ன்ற)
• பொன் + தகடு = பொற்றகடு (ன்த → ன் + த் + அ → ற்ற் + அ → ற்ற)

ஓரசை சொல் புணர்ச்சி விதி

ஓரசை வருமொழி முதல் →
ஓரசை நிலைமொழி இறுதி ↓
ல் ன்ன் ன் ஃற்
ள் ண்ண் ண் ஃட்
ண் ண்ண்    
ன் ன்ன்    

”ல்” ஓரசை சொல்லுக்குப் பின்னர் (எ + கா: அல், கல், பல்) த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல்த் → ஃற்
”ல்” ஓரசை சொல்லுக்குப் பின்னர் ம வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ல் → ன்
”ல்” ஓரசை சொல்லுக்குப் பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம்ந் → ன்ன்
(எ.கா.)
• கடல் + திரை = கடற்றிரை (ல் + தி → ல் + த் + இ → ற்ற் + இ → ற்றி)
• அல் + திணை = அஃறிணை (ஓரசை ல் + தி → ல் + த் + இ → ஃற் + இ → ஃறி)
• கல் + மலை = கன்மலை (ஓரசைல் → ன்)
• கல் + நெஞ்சு = கன்னெஞ்சு (ஓரசை ல் + நெ → ல் + ந் + எ → ன்ன் + எ → ன்னெ)

”ள்” ஓரசை சொல்லுக்குப் பின்னர் த வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள்த் → ஃட்
”ள்” ஓரசை சொல்லுக்குப் பின்னர் ம வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ள் → ண்
”ள்” ஓரசை சொல்லுக்குப் பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ம்ந் → ண்ண்
(எ.கா.)
• முள் + தீது = முஃடீது (ஓரசை ள்தீ → ள் + த் + ஈ → ஃட் + ஈ → ஃடீ)
• முள் + முடி = முண்முடி (ஓரசை ள் → ண்)
• முள் + நிலம் = முண்ணிலம் (ஓரசை நி → ள் + ந் + இ → ண்ண் + இ → ண்ணி)

”ண்” ஓரசை சொல்லுக்குப் பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ண்ந் → ண்ண்
”ன்” ஓரசை சொல்லுக்குப் பின்னர் ந வரியைச் சேர்ந்த சொல் வந்தால்: ன்ந் → ன்ன்
(எ.கா.)
• கண் + நீர் = கண்ணீர் (ண்நீ → ண் + ந் + ஈ → ண்ண் + ஈ → ண்ணீ)
• முன் + நிலை = முன்னிலை (ன்நி → ன் + ந் + இ → ன்ன் + இ → ன்னி)

உ → ஐ ஆகத் திரிதல்

உகரயீறு நிலைமொழி + உயிர்முதல் வருமொழி = உகரம் ஒழிந்து, மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர்மெய்யாகும்

(எ.கா.) 

வழக்கு + இடுதல் = வழக்கிடுதல்
கு + இ ⇄ க் + உ + இ ⇄ க் + இ ⇄ கி

”உ” வில் முடிவடியும் சொற்கள் சில உரிச்சொல்லாக மாற்றப்படும்போது ”உ” “ஐ” ஆகத் திரியும். இதன் போது ”உ”விற்கு முன்னதாக வரும் மெல்லினம் சிலவேலை மாற்றப்படும்.

(எ.கா.) 

• இன்று + நாள் → இற்றைநாள்
• அன்று + பாடு → அன்றைப்பாடு

நிலைமொழி + வருமொழி = புதுமொழி

உயிரீறு நிலைமொழி

நிலைமொழியின் இறுதியில் உயிரெழுத்து அமைவது உயிரீறு

மணி (ண் + இ) + மாலை = மணிமாலை

இ = உயிரீறு

மெய்யீறு நிலைமொழி

நிலைமொழியின் இறுதியில் மெய்யெழுத்து அமைவது மெய்யீறு

பொன் + வண்டு = பொண்வண்டு

ன் = மெய்யீறு

உயிர்முதல் வருமொழி

வருமொழியின் முதலில் உயிரெழுத்து அமைவது உயிர்முதல் ஆகும்

வாழை + இலை = வாழையிலை

இ = உயிர்முதல்

மெய்முதல் வருமொழி

வருமொழியின்) முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது மெய்முமதல் எனப்படும்.

தமிழ் + நிலம் = தமிழ்நிலம்

நி = ந்+இ = ந் = மெய்முதல்