நான்காம் நிலை கட்டுரை

திருவிழா

திருவிழா என்பது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடுவது. திருவிழா அல்லது ஊர்வலம் அல்லது வலம் என்பதே சரியான தமிழ்ப் பதமாகும். உற்சவம் என்பது பிற மொழிச் சொல்லாகும்.

திருவிழா நகரம்

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மதுரை திருவிழா நகரம் என்றழைக்கப்படுகின்றது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், ஆண்டிற்கு 12 மாதங்களும், 10 நாட்களுக்குக் குறையாமல் திருவிழா நடக்கும். மேலும் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழாவும், தெப்பத் திருவிழாவும் மிகவும் பிரசித்தம்.

பூச்சொரிதல் திருவிழா

தமிழ்நாட்டில் உள்ள மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடக்கும். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகப் பூச்சொரிதல் திருவிழா நடக்கும். இந்நிகழ்வே, திருவிழா ஆரம்பிப்பதற்கான அறிகுறியாகும். பூச்சொரிதல் அன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடி, மணமுள்ள மலர்களைக் கொணர்ந்து மூலவரான பெண் தெய்வங்கள்மேல் சொரிந்து வழிபடுவர்.

தேர்த் திருவிழா

பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவாரூர் தியாகராசர் கோவில் மற்றும் பல முக்கியமான திருக்கோயில்களில் தேர்த் திருவிழா மிக முக்கியமாகக் கொண்டாடப்படுகிறது. தேர்த் திருவிழாவின்போது, உற்சவர் தேரில் திருக்கோயிலை சுற்றி பவனி வருவார். திருவாரூர் தியாகராசர் கோவில் தேரே, தமிழகத்தின் பெரிய தேராகக் கருதப்படுகின்றது.

தைப்பூசத்திருவிழா
தை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கியமான திருவிழா, தைப் பூசத் திருவிழா ஆகும். உலகில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இத்திருவிழா மிகவும் பிரசித்தியானது.

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டுப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாகப் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இது தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.

ஆடித்திருவிழா
கார்த்திகை தீப நாளன்று, மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோவில்
தமிழகத்திலும், அதனைச் சுற்றியிருக்கும் மாநிலங்களில் வீற்றிருக்கும் பெண் தெய்வமான மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும். இம்மாதத்தில், பெண்கள் மாரியம்மனுக்கு விரதமிருந்தும், தீ மிதித்தும், அம்மனுக்கு கூழ் வார்த்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.

கா‌ர்‌த்‌திகை ‌தீப‌த்திரு‌விழா
கா‌ர்‌த்‌திகை ‌தீப‌த் ‌திரு‌விழா ஆண்டுதோறும் 10 நா‌ட்க‌ள் வெகுசிறப்பாக நடைபெறுவது வழ‌க்க‌ம். கா‌ர்‌த்‌திகை‌த் ‌தீப‌த் ‌திரு‌விழா அ‌ன்று மாலை, குன்றுகளைக் கொண்ட அனைத்து சிவ மற்றும் முருகர் கோவில்களில் அக‌ண்ட கா‌ர்‌த்‌திகை ‌தீப‌ம் ஏ‌ற்ற‌ப்படு‌ம். இத்திருவிழா, திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், தமழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள (குன்றுகள் அல்லாத) சைவசமயம் மற்றும் வைணவ தலங்களில், பெரிய கார்த்திகை நாளன்று சொக்கப்பனை] கொளுத்தப்படும்.

திருஓணம்
ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன. இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கிறித்துவ தேவாலயத் திருவிழா ஊர்வலம்
கிறித்துமசு கொண்டாட்டம் உள்ளிட்ட மிக முக்கிய தினங்களில், தேவாலயத் திருவிழாக்கள் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல புனித ஆலயங்களில் திருவிழா ஊர்வலமும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டமும் நடைபெறும்.

இசுலாமிய ரமலான் நோன்பு திருவிழா
ஒவ்வொரு வருடமும் இசுலாமிய நாட்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள், பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்கு நேர பெண்கள், குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

தியாகத் திருநாள்
தியாகத் திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்தப் பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.