நான்காம் நிலை கட்டுரை

ஐம்பூதங்கள்

ஐம்பூதங்கள் என்பவை ஆகாயம், காற்று, நீர், நிலம், நெருப்பு ஆகிய ஐந்துமாகும். இந்த வகையில் இவை ஒவ்வொன்றையும் பின்வருமாறு நோக்கலாம்.

ஆகாயம்

ஆகாயமானது மற்ற நான்கு பூதங்களான நீர், நிலம், தீ, காற்று ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாக அமைகிறது. ஆகாயத்தினை முடிவில்லாத வெட்டவெளி மற்றும் பேரண்டம் என்றும் அழைப்பர்.

காற்று

மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான ஒன்றாகவே காற்று காணப்படுகின்றது. காற்றினை வளி என்றும் அழைப்பர். காற்று இன்றி இந்த பூமி இயங்குவது கடினமானதாகும்.

நீர்

தண்ணீர் எனவும் அழைக்கப்படுகின்றது. இதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். எனவே உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது எனலாம்.

நிலம்

நிலத்தை பூமி மண் என்றெல்லாம் அழைப்பர். இந்த நிலமானது. தண்ணீர், பலவகையான உலோகங்கள், கனிமப் பொருட்கள், நாம் உண்ணும் உணவுகளை விளையச் செய்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் மனிதனுக்கு உதவியாகவே உள்ளது.

தீ
நெருப்பு என்றும் அழைக்கப்படும். எல்லா பொருட்களையும் எரித்து சாம்பலாக்கும் வல்லமை கொண்டதாக இந்த தீ காணப்படுகின்றது.