நான்காம் நிலை கட்டுரை

கால அளவுகள்

மதி

நிலவு அற்ற நாள் மறைமதி (அமாவாசை)

முழு நிலவுள்ள நாள் முழுநிலா முழுமதி (பௌர்ணமி)

அம்மாவாசை முதல் முழு நிலாவாக வளர்வது வளர்பிறை

வளர்பிறையின் மூன்றாம் நாள் மூன்றாம்பிறை

முழுநிலா (பௌர்ணமி) முதல் அமாவாசையாகத் தேய்வது தேய்பிறை

கால அளவுகள்

2 முறை கண்ணிமைக்கும் நேரம்  1 வினாடி
60 வினாடிகள் கொண்ட கால அளவு  1 நிமிடம்
60 நிமிடம் கொண்ட கால அளவு  1 மணி நேரம்
24 நிமிடங்கள் கொண்ட கால  1 நாழிகை
24 மணி நேரம் கொண்ட கால அளவு  1 நாள்
7 நாட்களைக் கொண்ட ஒரு கால அளவு  1 வாரம்
30 நாட்கள் கொண்ட கால அளவு  1 மாதம்
12 மாதம் கொண்ட கால அளவு  1 ஆண்டு
60 ஆண்டுகள் கொண்ட கால அளவு  1 வட்டம்

(எ.கா.) நாழி ஆகிட்டு – Getting late – தாமதமாகிறது

ஆறு சிறுபொழுதுகள்

காலை 6 முதல் 10 மணி வரை
நண்பகல் 10 முதல் 14 மணி வரை
ஏற்பாடு 14 மணி முதல் 18 மணி வரை
மாலை 18 மணி முதல் 22 மணி வரை
யாமம் 22 மணி முதல் 2 மணி வரை
வைகறை (விடியல்) 2 மணி முதல் 6 மணி வரை

Midnight – நடுநிசி, நள்ளிரவு

வார நாட்கள்

ஞாயிறு Sunday
திங்கள் Monday
செவ்வாய் Tuesday
புதன் Wednesday
வியாழன் Thursday
வெள்ளி Friday
சனி

Saturday

கோள்கள்

ஞாயிற்றுக்கிழமை கதிரவனுக்கு உரிய நாள்.

திங்கட்கிழமை நிலாவுக்கு உரிய நாள்.

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிகிழமை கோள்களுக்குரிய நாட்கள்.

புதன் Mercury
வெள்ளி Venus
பூமி Earth
செவ்வாய் Mars
வியாழன் Jupiter
சனி Saturn
விண்ணன் Uranus
சேணன் Neptune
ஞாயிறு Sun
நிலா Moon

மாதங்கள்

சந்திரப்பெயர் சூரியப்பெயர் English
தை சுறவம் ½ December (+) ½ January
மாசி கும்பம் ½ January (+) ½ February
பங்குனி மீனம் ½ February (+) ½ March
சித்திரை மேழம் ½ March (+) ½ April
வைகாசி விடை ½ April (+) ½ May
ஆணி  ஆடவை ½ May (+) ½ June
ஆடி கடகம் ½ June (+) ½ July
ஆவணி மடங்கல் ½ July (+) ½ August
புரட்டாசி  கன்னி ½ August (+) ½ September
ஐப்பசி  துலை ½ September (+) ½ October
கார்த்திகை நளி ½ October (+) ½ November
மார்கழி சிலை ½ November (+) ½ December

பருவ காலங்கள்

பெரும்பொழுதுகள் இயல்பு மாதம்
இளவேனிற் காலம் பூக்கள் பூக்கும் வசந்த காலம் சித்திரை, வைகாசி
முதுவேனிற் காலம் வெயில் அடிக்கும் கோடை காலம் ஆனி, ஆடி
கார்காலம் மேகங்களால் சூழ்ந்த மழை காலம் ஆவணி, புரட்டாசி
கூதிர்காலம் குளிர் காற்று வீசும் குளிர் காலம் ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக் காலம் விடியலில் பனி பெய்யும் காலம் மார்கழி, தை
பின்பனிக் காலம் காலையில் பனி பெய்யும் காலம் மாசி, பங்குனி
குளிர்காலம் Winter
வசந்தகாலம் Spring
கோடைக்காலம் Summer
இலையுதிர் காலம் Autumn

 

பருவங்கள்