நான்காம் நிலை கட்டுரை

குறிஞ்சித் தமிழகம்

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் (Eastern Ghats) என்றழைக்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும்.

உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும். இங்குச் சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.

கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கில் தக்காண பீடபூமி அமைந்துள்ளது.

தமிழ் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம்வரை நீண்டு பரவியுள்ளது. தொட்டபெட்டா சிகரம் தமிழ் நாட்டின் மிக உயர்ந்த சிகரமாகும். மேற்கு மலைத் தொடரும், கிழக்கு மலைத் தொடரும் நீலகிரி மலைப்பகுதியில் ஒன்று சேர்கின்றன.

தமிழ்நாட்டின் நீலகிரியிலிருந்தும் கேரளாவின் ஆனைமுடி மலையிலிருந்தும் ஓர் கிளைத்தொடர் குன்று கிழக்கு நோக்கிச் செல்கின்றது. இதற்குப் பழனிக் குன்றுகள் என்று பெயர்.

மேற்கு தொடர்ச்சி மலைகள் இடைவெளியற்று காணப்பட்டாலும் பாலக்காடு அருகே 25 கி.மீ. நீளத்தில் ஓர் கணவாய் காணப்படுகிறது. பாலக்காட்டு கணவாய்க்குத் தெற்கே ஆண்டிப்பட்டி மலை, ஏலமலை, அகத்திய மலை ஆகிய மலைகள் காணப்படுகின்றன.

கம்பம் பள்ளத்தாக்கு, தேக்கடி மலைகள், வருஷநாடு மலைகள் மற்றும் கொடைக்கானல் மலைகள் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. வருஷ நாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி, செங்கோட்டை என்று கணவாய் அழைக்கப்படுகின்றது.

சமவெளிகளையும், பீட பூமிகளையும் பிரிக்கும் தமிழ்நாட்டின் மலைகளுக்கு இடையே இரண்டு குறிப்பிடத் தக்க இடைவெளிகள் காணப்படுகின்றன. அவை தெற்கில் ஆத்தூர் கணவாய் என்றும், வடக்கில் செங்கம் கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கணவாய்கள் கடலூர் மாவட்டத்தைச் சமவெளி பகுதியோடும், சேலம் மாவட்டத்தைப் பீடபூமி பகுதியோடும் இணைக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும்போது கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றது. இடைவெளிவிட்டு காணப்படும் தனித்த மலைப்பகுதிகள் வடகிழக்கிலிருந்து தென் மேற்காக வேலூர், தருமபுரி, மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விரவி காணப்படுகிறது.

.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்

1. நீலகிரி மலை

2. ஆனை மலை

3. பழனி மலை

4. கொடைக்கானல் குன்று

5. குற்றால மலை

6. மகேந்திரகிரி மலை

7. அகத்தியர் மலை

8. ஏலக்காய் மலை

9. சிவகிரி மலை

10. வருஷநாடு மலை

தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்

1. ஜவ்வாது மலை

2. கல்வராயன் மலை

3. சேர்வராயன் மலை

4. பச்சை மலை

5. கொல்லி மலை

6. ஏலகிரி மலை

7. செஞ்சி மலை

8. செயிண்ட்தாமஸ் குன்றுகள்

9. பல்லாவரம்

10. வண்டலூர்

தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்

1. ஊட்டி

2. கொடைக்கானல்

3. குன்னுர்

4. கோத்தகிரி

5. ஏற்காடு

6. ஏலகிரி

7. வால்பாறை