பாடநூல் பாடங்கள் கட்டுரை

பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்களுள் ஒருவர். இவரது தந்தை பெயர் கனகசபை. தாயின் பெயர் இலக்குமி அம்மாள். இவர் 1891 சித்திரை 29ஆம் நாள் புதுச்சேரியில் பிறந்தார். பாரதிதாசனின் இயற் பெயர் கனக சுப்புரத்தினம். இவரின் கவிச் சிறப்புக் காரணமாகப் பாவேந்தர் என அழைக்கப் படுகிறார். இவரது படைப்புகள் காவியம், நாடகம், கவிதை, இசைப் பாடல், கட்டுரைகள், துணுக்குகள் எனும் வகைகளுள் அடங்குகின்றன. தமிழ்க் கவிதை வரலாற்றின் திருப்புமுனைக் கவிஞர்களில் ஒருவராகப் பாரதிதாசன் திகழ்கிறார். இவரது கவிதைகள் தமிழ் மொழி, உணர்வு, வீரம், குமுகம், இயற்கை போன்றவற்றை உணர்வோடு வெளிப்படுத்துகின்றன. பாவேந்தர் ஈடு இணை அற்ற தமிழ் மறு மலர்ச்சிப் பாவலராக விளங்குகிறார்.